அதிக விலைக்கு அரசி விற்பனை செய்த 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை!

Friday, December 27th, 2019

மாத்தறை மாவட்டத்தில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 5 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

10 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளனர். 2 ரக அரிசிகள் ஆக கூடிய சில்லறை விலை 98 ரூபாவாக நிர்ணயித்து நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை வர்த்தகமானியில் வெளியிட்டிருந்தது.

இந்த வர்த்தமானி அறிவிப்பை கவனத்தில் கொள்ளாது அரிசியை கூடுதலான விலைக்கு விற்பனை செய்த கிரிந்த என்ற இடத்தை சேர்ந்த 2 வர்த்தகர்களுக்கும், ஹக்மனவை சேர்ந்த ஒருவருக்கும், காலாவதியான பொருட்களை விற்பனை செய்த மற்றும் விலைப்பட்டியலை காட்சி படுத்தாது அரிசியை விற்பனை செய்த 2 வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts: