அதிக மதுசாரம் அடங்கிய ஆயுர்வேத பொருட்கள் விற்கும் இடங்கள் மீது உடனடி சோதனை!

Sunday, August 7th, 2016

 

அங்கீகரிக்கப்பட்ட அளவினை விட அதிகமான மதுசாரம் அடங்கிய ஆயுர்வேத உற்பத்தி பொருட்கள் விற்கப்படும் நிலையங்களை உடனடியாக சோதனைக்குட்படுத்துமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். ஆயுர்வேத உற்பத்தி பொருட்களில் அங்கீகரிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மதுசாரம் காணப்படுவதாக நாவின்ன ஆயுர்வேத ஆய்வுகூடத்தின் பணிப்பாளரால் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சுகாதார அமைச்சு இந்த பணிப்புரையை விடுத்துள்ளது.

ஆயுர்வேத உற்பத்திகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட மதுசாரத்தின் அளவு 4.5 வீதமாகும். எனினும் சில நிறுவனங்களில் தயாரிக்கப்படும் ஆயுர்வேத உற்பத்திகளில் 10 வீதத்திற்கும் அதிகமாக மதுசாரம் சேர்க்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமை ஆயுர்வேத உற்பத்தி விற்பனை நிலையங்களை பொதுசுகாதார பரிசோதகர்கள் மற்றும் ஆயுர்வேத வைத்தியர்களை கொண்டு சோதனைக்குட்படுத்துமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

Related posts: