அதிக பயணிகளை ஏற்றிச்சென்றால் அரைச்சொகுசு பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும்!

Thursday, September 1st, 2016
ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் அரைச்சொகுசு பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் மேற்கொள்ளப்படும் சோதனைகளின் போது ஒரே பேருந்து 6 மாதங்களுக்குள் மூன்று தடவைக்கு மேலதிகமாக பயணிகளின் ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்வது தொடர்பில் அறியப்பட்டால் குறித்த பேருந்தின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பயணிகளிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்ற காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்திர தெரிவித்தார்.
குறிப்பாக இரவு நேரங்களில் பயணிக்கும் பேருந்துகளிலேயே இத்தகைய சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: