அதிக பணிச்சுமை – தாதியர்களுக்கு பாரிய அசௌகரியம் – அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் சுட்டிக்காட்டு!

Tuesday, May 4th, 2021

தற்போதைய சூழலில் தாதியர்கள் அனைவரும், அதிக பணிச்சுமை காரணமாக பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து குறித்த சங்கத்தின்  உபசெயலாளர் புஷ்பா ரம்யானி டி சொய்ஷா  மேலும் தெரிவிக்கையில் –

குறைந்தளவான தாதியர்களைக் கொண்ட பணிக் குழாமினரே சேவையில் ஈடுபடுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டில் தற்போது 38 ஆயிரமம் தாதியர்கள் மொத்தமாக சேவையாற்றி வருகின்றனர்.

எனினும், இந்த எண்ணிக்கையின் இரு மடங்கு எண்ணிக்கையான தாதியர்கள் அவசியமாக உள்ளனர் எனவும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் உபசெயலாளர் புஷ்பா ரம்யானி டி சொய்ஷா  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: