அதிக பணம் அறிவிடம் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து!

Monday, April 18th, 2016

சாதாரண கட்டணத்தைவிட அதிகமாக பணம் அறவிடும்  பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை 3 மாதங்களுக்கு தற்காலிகமாக இரத்து செய்தவற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதிக கட்டணம் அறவிடும் பேருந்துகள் தொடர்பில் 1955 என்ற இலக்கத்திற்கு அறியப்படுத்த முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி ஹேமஷந்திர குறிப்பிட்டுள்ளார்.

உரிய ஆதாரங்களுடன் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் சம்பந்தப்பட்ட பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் 3 மாதங்களுக்கு இரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக தற்போது விசேட சேவையில் ஈடுபட்டுள்ள பஸ்களில் இறுதி தரிப்பிடம் வரையான கட்டணங்களே இடையில் இறங்கும் பயணிகளிடமும் அறிவிடப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வாறான சம்பவங்கள் குறித்து அறியப்படுத்தும் போது சம்பந்தப்பட்ட பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:


மக்களின் வரிப்பணத்தில் இன்னொரு விசாரணைக் குழுவா? மாகாண சபையின் விசாரணை அறிக்கை எங்கே?... மாநகரசபையில...
20 ஆவது திருத்தச் சட்டம் மீதான மனுக்களை ஆராயும் அமர்வு ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழுவின் முன்னி...
அனைத்து பாடசாலைகளிலும் இதுவரையில் ஆரம்பிக்கப்படாத தரங்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கள்ம...