அதிக கட்டணம் அறவிட்ட பேருந்து சாரதி நடத்துனர் கைது!

அதிகரித்த பயணக் கட்டணத்தை அறவிட்ட தனியார் பேருந்து தொடர்பில் பயணி துரிதமாகச் செயற்பட்டமையால் கிளிநொச்சி பொலிஸார் பேருந்தை மடக்கிப் பிடித்தனர். பேருந்தின் சாரதியும் நடத்துனரும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 11ஆம் திகதி பயணி ஒருவர் கைதடியிலிருந்து மாங்குளம் செல்வதற்காகத் தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற அந்தப் பேருந்தில் ரிக்கெட் எடுத்துள்ளார். கைதடியிலிருந்து மாங்குளம் செல்வதற்கு 120 ரூபாவே கட்டணமாக அறவிடப்படுவது வழமை. இருப்பினும் மேற்படி பேருந்து நடத்துனர் 200ரூபா பணம் வடக்கு மாகாணத் தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத் தலைவருக்கு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார். பின்னர் கிளிநொச்சி நகரைக் கடப்பதற்கு முன்னர் பொலிஸார் அதனை மடக்கிப் பிடித்தனர். பேருந்தின் சாரதி, நடத்துனர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
Related posts:
|
|