அதிகூடிய வெப்பநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்’ – சிரேஷ்ட வளிமண்டலவியல் நிபுணர் சமிந்த டி சில்வா எச்சரிக்கை!
Sunday, May 5th, 2024தற்போது நிலவும் அதிகூடிய வெப்பநிலை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட வளிமண்டலவியல் நிபுணர் சமிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
மனித உடலால் உணரப்படும் அதிகூடிய வெப்பநிலை தற்போது நாட்டில் நிலவி வருகிறது. தென்மேற்கு பருவமழை வலுவடையும் வரையில் தற்போதைய வெப்பநிலையில் மாற்றம் ஏற்படாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தின் பின்னர் தென்மேற்கு காற்றின் வேகம் வலுவடையுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைவாக இந்த நிலைமையை மனித உடலால் உணரப்படும் அதிகூடிய வெப்ப நிலை என்று குறிப்பிடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக எதிர்வரும் 14 நாட்களுக்கு பொதுமக்கள் இயன்றவரை சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுவது முக்கியமானதாகும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட வளிமண்டலவியல் நிபுணர் சமிந்த டி சில்வா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|