அதிகாரிகளுக்கு வடமாகாண ஆளுநர் பணிப்பு!
Saturday, April 1st, 2017வடமாகாணத்தில் டெங்கு நோய் அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ளதைத் தொடர்ந்து யாழ்ப்பாண நகரை ஒரு மாதத்திற்குள் சுத்தப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ரொஜினோல்ட் குரே அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வடிகான் கட்டமைப்புக்களும், நீர்த்தேக்கங்களும் முறையான தராதரத்துடன் பாராமரிக்கப்படுவதில்லை என்று தெரிய வந்துள்ளது.
யாழ் நகரின் அழகை தொடர்ந்தும் பேணுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த மூன்று மாதங்களில் டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படும் 26 பேர் இனங்காணப்பட்டுள்ளார்கள்.
Related posts:
காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் தலைவராக சாலிய பீரிஸ்!
கட்டணங்கள் அதிகரிப்பு தொடர்பில் புதனன்று தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம !
சகல கட்சிகளும் அடங்கிய நாடாளுமன்ற சபை அவசியம் - உயரிய சபையின் கலாசாரத்தை மாற்றும் தருணமிது – பிரதமர்...
|
|