அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக பிறப்பு இறப்பு மற்றும் மரண சான்றிதழ்களில் தவறுகள் ஏற்படுமாயின் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த பணிப்பு!

அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக பிறப்பு இறப்பு மற்றும் மரண சான்றிதழ்களில் தவறுகள் ஏற்படும் பட்சத்தில் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
உள்விவகார இராஜாங்க அமைச்சின் முன்னேற்ற கூட்டம் நேற்று இடம்பெற்ற போதே குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பதிவாளர் திணைக்கள அதிகாரிகளுக்கே இராஜாங்க அமைச்சரால் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சான்றிதழ்களில் தவறுகள் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அதிகாரிகளின் கவனயீனம் அதிளவில் தவறுகள் ஏற்பட்ட நிலையில், இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அதிநவீன புகையிரதங்களை கொள்வனவு !
ஒரு மில்லியன் வேலைத்திட்டத்தில் புங்குடுதீவு பொது நூலகத்துக்கு பொது மலசலகூடம்!
இலங்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மாவட்ட மட்டத்தில் மீளா...
|
|
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் வெளியாகும் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு...
மீன்பிடித் துறைமுகங்களில் முதலீடுகளை மேற்கொள்ள தனியார் முதலீட்டாளர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் அமை...
கொழும்பு - புறநகரில் சூரிய சக்தி படகு சேவை ஆரம்பம் - நாட்டின் உள் கால்வாய்கள் ஊடாக மேலும் பல படகு சே...