அதிகளவான வாகன விபத்துக்கள் சம்பவிக்கும் மாதமாக ஏப்ரல் மாதம் இனங்காணப்பட்டுள்ளது – சாரதிகளுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாரளர் எச்சரிக்கை!

இலங்கையில் அதிகளவான வாகன விபத்துக்கள் சம்பவிக்கும் மாதமாக ஏப்ரல் மாதம் கருதப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாரளர், பிரதி பெலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஏப்ரல் 10 ஆம் திகதிமுதல் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகளவான விபத்துக்கள் சம்பவிக்க கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் வீதி போக்குவரத்து விதிகளை சாரதிகள் உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை நேற்று பதிவான விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாரளர், பிரதி பெலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு கிழக்கில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்!
புதிய சட்டத்திற்கு முச்சக்கரவண்டி சங்கம் எதிர்ப்பு!
மிளகு இறக்குமதியை நிறுத்த தீர்மானம்!
|
|