அதிகளவான திருத்தச் சட்டங்களை முன்வைத்து நாளையதினம் கூடுகின்றது இவ்வாண்டின் முதலாவது நாடாளுமன்றம்!

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் அதிகளவான திருத்தச் சட்டங்கள் ஒரே தினத்தில் கொண்டு வரப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்திருத்தச் சட்டங்கள் நாளையதினம் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வின்போது கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சாட்சியங்கள் கட்டளைச் சட்டம், பிணை சட்டம், குற்றவியல் தண்டனை சட்டம், அலுவலகம் மற்றும் கடைகள் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், சிறுவர்களை தொழிலில் ஈடுபடுவது தொடர்பான சட்டம், குறைந்தபட்ச சம்பளம் தொடர்பான சட்டம் ஆகிய 8 சட்டங்களுக்கான திருத்தச் சட்டங்கள் நாளையதினம் கொண்டு வரப்படவுள்ளது. அத்துடன் இவை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் பத்திரத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நான் தலைவராக இருந்திருந்தால் விளக்கம் கேட்டிருப்பேன் -சந்திரிகா !
நாடளாவிய ரீதியாக யானைகளை கணக்கெடுப்பதற்கு திட்டம்!
உள்நாட்டு விமான சேவைகளுக்கான இரவு நேர விமானங்களுக்கான தடை நீக்கம்!
|
|