அதிகரித்த வறட்சி: மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுமா? – மக்கள் அச்சம்!

மின்சாரத்தை சேமிப்பதற்காக சாதாரண மின்குமிழ்களுக்கு பதிலாக LED மின்குமிழ்களை இலவசமாக வழங்குவதற்கான யோசனையை விரைவில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்
நாட்டில் நிலவி வரும் கடும் வறட்சி நிலையானது ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து நீடித்தால் மின்சார விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் மழை கிடைக்கவில்லை என்றாலும் மின்சாரம் தடைப்படாது என அரசாங்கம் மீண்டும் உறுதியளித்துள்ளது.
அத்துடன் மின்சார கட்டணம் உயர்த்தப்படாதென மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.மேலும் மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு விசேட பரிசு வழங்கப்படும் வேலைத்திட்டம் ஒன்று செயற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
|
|