அதிகரித்த மின்கட்டணம் – முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டு!

Friday, November 3rd, 2023

அதிகரித்த மின்கட்டணம், வரிகள் காரணமாக, முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான செலவுகள் மிகவும் அதிகரித்து செல்வதால் இலங்கை முதலீட்டாளர்கள் விரும்பாத இடமாக மாறிவருகின்றது.

இதன் காரணமாக இலங்கையில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களை கேட்டுக்கொள்வது  புதிய சவாலாக மாறிவருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அதிகரித்துவரும் மின்கட்டணமே முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு  கேட்டுக்கொள்வதில் கடுமையான சவாலாக உள்ளது.

பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் வர்த்தக சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தக நடவடிக்கைகளிற்கான செலவுகள் அதிகரிப்பதால் உள்ளுர் உற்பத்திகளால் வெளிநாட்டு சந்தையில் போட்டிபோட முடியாத நிலை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: