அதிகரித்துவரும் வரட்சி: அரசாங்கம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

Thursday, January 12th, 2017

வரட்சி காரணமாக நீர் மின் உற்பத்தி 35 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா, மின்சாரப் பாவனையாளர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்

கடுமையான வரட்சி நிலவுகின்ற போதும் மின்சார துண்டிப்பு இடம்பெறாது என்றும் அனல் மின் நிலையம் மூலமாக வரட்சியினால் ஏற்படக்கூடியமின்சார பிரச்சினையை எதிர்கொள்வதற்கு தாம் தயாராகி வருவதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்ர் தெரிவித்துள்ளார்.

தேசிய மின் வலைப்பின்னலுக்கு மின்சாரத்தை வழங்க முன்வருவார்களாயின் அவ்வாறானோர்களுக்கு ஒரு மின் அலகிற்கு 36 ரூபா 50 சதம் வழங்கப்படும் என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார். மின்துண்டிப்பு இடம்பெறுமாயின் அது குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படும். ஆனால்தற்பொழுது அவ்வாறான ஒரு தேவை இல்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ajith-p-perera_CI-720x480-720x480

Related posts: