அதிகரிக்கும் செலவீனங்கள் – மூடப்படும் துறைமுகம்!
Wednesday, April 26th, 2017பராமரிப்பு செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் அம்பாறை, ஒலுவில் துறைமுகத்தை மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த துறைமுகத்தின் செலவீனங்களை குறைப்பதற்கு போதியளவு நிதியுதவி கிடைக்கப்பெறாமையின் காரணமாக அதனை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த துறைமுகத்தினை அமைப்பதற்கு முன்னர் சரியான முறையில் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு பணிகள் இடம்பெறவில்லை.
குறிப்பாக 250க்கும் மேற்பட்ட படகுகள் இந்த துறைமுகத்தில் நிறுத்தி வைக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், படகுகள் ஆபத்தான நிலையில் துறைமுகங்களுக்கு வெளியிலேயே நங்கூரமிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஒலுவில் துறைமுகத்தின் பராமரிப்பு செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் ஒலுவில் துறைமுகத்தினை மூடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|