அதிகரிக்கும் கொரோனா வைரஸ் : சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள அச்சம்!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பணிகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளில் தட்டுப்பாடு நிலவுகிறது.
உடனடியாக இந்த பாதுகாப்பு பொருட்கள் வழங்கப்படாது போனால் நாடளாவிய ரீதியில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், முன்னிலை சுகாதார பணியாளர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகக்கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜே.வி.பியின் தொழிற்சங்க தலைவரான எஸ்.பி.மெடிவத்த இது தொடர்பாக தகவல் தருகையில்,
சுகாதார பணியாளர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி, இலங்கையிடம் வேண்டுகோள்!
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது!
கடமை நேரத்தில் மது அருந்தும் அரச ஊழியர்கள் வேலையிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் - நல்லொழுக்க ச...
|
|