அதிகரிக்கும் கொரோனாத் தொற்றின் மத்தியிலும் கூடியது நாடாளுமன்றம்!

Tuesday, February 8th, 2022

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது. இந்த கூட்டத்தொடரில் காலை 10 மணி தொடக்கம் 11 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், 11 மணி  தொடக்கம் 4.30 மணிவரை 2015 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகளும், மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் திருத்தச் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து, சிறி சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான கூட்டிணைத்தல் சட்டமூலம் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.

அதனை அடுத்து, பிற்பகல் 4.30 மணி தொடக்கம் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பிற்பகல் 4.50 மணி தொடக்கம் பிற்பகல் 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: