அதிகரிக்கின்றது கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை – பொதுமக்களுக்கு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே எச்சரிக்கை!

Sunday, January 23rd, 2022

அதிகரித்துவரும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை குறித்து இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே பொதுமக்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் எதிர்காலத்தில் நாடளாவிய முடக்கல் நிலைக்கான தேவை எழாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்கால பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் பொதுமக்களைிடம் வலியுறுத்தியுள்ளர்.

இதேவேளை அனைவரும் உடனடியாக பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ள  இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே உள்ளுர் மக்கள் பாதுகாப்பு நடைமுறைகளை போதியளவு பின்பற்றாத நிலையில் வெளிநாட்டவர்களை குறை சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts: