அதிகமாக டெங்கு பரவும் மாவட்டத்தில் யாழ்ப்பாணமும் இணைவு!

Thursday, June 30th, 2016

நாட்டில் அதிகமாக டெங்கு நோய் பரவிவரும்  10 மாவட்டங்களை சுகாதார பிரிவு இன்று (30) அறிவித்துள்ளது.

குறித்த டெங்கு தொற்றுவானது கொழும்பு, கண்டி, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, யாழ்பாணம், குருநாகல், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் புத்தளம் போன்ற மாவட்டங்களில் அதிகமாக நோய் தொற்று பரவிவருவதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் டெங்கு நோய் மேல் மாகாணத்திலேயே அதிகமான பாதிப்புகளை ஏற்படத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேல்மாகாணத்தில் கடந்த 6 மாதங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6328 ஆகவும், டெங்கு நோயால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 11 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை சுத்தப்படுத்துவதோடு, சுகயீனம் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெற வேண்டுமென மக்கள் அறிவறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts: