அதிகபட்ச விலைக்கு மேல் பொருட்களை விற்றால் ஒரு லட்சம் ரூபா ரூபாய் அபராதம் – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Tuesday, August 10th, 2021

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் பொருட்களை விற்பனை செய்பர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை 2,500 ரூபாயாக இருந்த அபராத தொகை ஒரு இலட்சம் ரூபாயாக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக  வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: