அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டி கிழக்குப் பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு!
Tuesday, November 22nd, 2016அண்மையில் விடுவிக்கப்பட்ட வலி. வடக்கின் தையிட்டி கிழக்குப் பகுதியில் பொது மக்களின் காணிகளிலிருந்து இரண்டு மிதிவெடிகளும், எறிகணை ஒன்றும் நேற்று மீட்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட தமது காணிகளைத் துப்பரவு செய்யும் போதே குறித்த வெடி பொருட்கள் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்துக் குறித்த வெடி பொருட்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுப் பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

Related posts:
நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முன் மரபணு பரிசோதனை -சுகாதார அமைச்சு முன்னெடுக்கத் தீர்மானம்!
அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் தீவிர விசாரணை - அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான பொதுச் செயலாள...
சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி – ஜனாதிபதி தெரிவிப்ப...
|
|