அடையாள அணிவகுப்புக்கு புதிய ஆடை!

Wednesday, November 9th, 2016

சந்தேக நபர்களை, அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் போது, புதியவகை ஆடையொன்றை அணிவித்து, முன்னிலைப்படுத்தி, சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக, விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஜெக்கெட் ஒன்றை பயன்படுத்தும் நடவடிக்கை, ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விசேட ஆடை, அவுஸ்திரேலியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை காலமும், சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த, துணியொன்றே போர்த்தப்பட்டு வந்ததென்பதும் குறிப்பிடத்தக்கது.

4-6

Related posts: