அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும் – யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தினை கிராம சேவையாளரூடாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் – “இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் 2019ஆம் ஆண்டுக்குரிய தேர்தல் இடாப்பு பயன்படுத்தப்படவுள்ளது. 2019 தேர்தல் இடாப்பில் பெயர் உள்ளவர்கள் இம்முமுறை தேர்தலில் வாக்களிப்பதற்கு உரிமை உள்ளவர்கள்.
அதேபோல், தேர்தலில் வாக்களிப்பதற்கு சமுகமளிக்கும் ஒருவர் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆள் அடையாளத்தைச் சமர்ப்பித்து வாக்களிக்க முடியும். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆள் அடையாளமாக அடையாள அட்டை, வாகன சாரதி அனுமதி பத்திரம், கடவுச்சீட்டு மற்றும் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் மதகுருமாருக்கு என வழங்கப்பட்ட அடையாள அட்டை, சமூக சேவை திணைக்களத்தால் வழங்கப்படுகின்ற முதியோர் அடையாள அட்டை போன்றவை ஏற்றுக்கொள்ளப்படும்.
இத்தகைய எந்தவொரு ஆவணமும் இல்லாத ஒருவர் தற்காலிகமாக தேர்தல் திணைக்களத்தினால் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்க முடியும் எனவும் அவர்’ தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|