அடையாளம் காண மக்கள் உதவியை நாடும் பொலிஸார்!

Monday, November 28th, 2016

கல்லுண்டாய் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி வீழ்ந்து கிடந்த நிலையில் பொலிஸாரால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தொடர்பிலான தகவலை வழங்கமாறு  மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.ஜீ.என்.டி ஜெயவீர, பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்.

45 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் கடந்த 16ம் திகதி இரவு கல்லுண்டாய் வெளிபகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதுவரை பேசமுடியாத நிலையில் சிகிச்சை பெற்று வரும் இவரை, அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இவர் தொடர்பில் தகவல் தெரிந்தால், 021-2255160 அல்லது 0777811168 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து மக்கள் தகவலளிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

sri-lanka-police-logo_1-1

Related posts: