அடையாளம் காணப்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்களின் உறவினர்களுக்கு தடுப்பூசி – அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பதிரண அறிவிப்பு!

அடையாளம் காணப்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் செவிலியர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இணை அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பதிரண இதனை தெரிவித்துள்ளார்..
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நடத்தும் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலிலுக்கும்போதே இவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முன்னணி சுகாதார ஊழியர்களின் உறவினர்களுக்கு தடுப்பூசி போடுவதன் அவசியத்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னணி சுகாதார ஊழியர்கள் தங்கள் நெருங்கிய உறவினர்கள் மூலம் கொரோனா தொற்றும் அபாயத்தில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தங்கள் உறவினர்களுக்கு மீதமுள்ள அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்கியதாகக் கூறி பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|