அடையாளம் காணப்படுகின்ற கொரோனா நோயாளர்களில் 50 சதவீதமானவர்கள் ஒமைக்ரொன் உடையவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Tuesday, January 25th, 2022

நாட்டில் தற்போது அடையாளம் காணப்படுகின்ற கொரோனா நோயாளர்களில் 50 சதவீதமானவர்கள் ஒமைக்ரொன் திரிபினை உடையவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது நாளாந்தம் 800 க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இந்த சூழ்நிலை மிக ஆபத்தானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தாங்கள் செல்கின்ற பிரதேசங்களில் குறைந்தபட்சம் ஒருவரேனும் கொவிட் நோய் தொற்றுடன் இருக்கக்கூடும் என்ற எண்ணத்துடன், சுகாதார அறிவுறுத்தல்களைச் சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என்றும் பொதுமக்களிடம் ஆவர் கோரிக்கையும் விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது அறிகுறிகள் அற்ற அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

அவர்களில் அதிகமானவர்கள் ஒமைக்ரோன் திரிபுடையவர்கள். மேலும் அவர்களில் டெல்டா திரிபையும் கொண்டவர்கள் இருக்கக்கூடும் என்பதை மறக்கக்கூடாது எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: