அடையாளம் காணப்படாத நிலையில் பெரும் எண்ணிக்கையிலான சடலங்கள்!

Tuesday, April 23rd, 2019

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின், பெரும் எண்ணிகையிலான சடலங்கள் கொழும்பு தலைமை நீதி வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் இருப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீலமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் இந்த அலுவலகங்களுக்கு சென்று சடலங்களை அடையாளம் காணமுடியும் என்று கொழும்பு தலைமை நீதிமன்ற வைத்திய அதிகாரி டொக்டர் அஜித் தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பான நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீலமைப்பு அமைச்சு அறிக்கை ஒன்றையும் இன்று வெளியிட்டுள்ளது.

கொழும்பு 10 பிரான்ஸ் வீதியில் இலக்கம் 111இல் அமைந்துள்ள நீதி வைத்திய மற்றும் விடயதான வைத்திய பிரிவுகளுக்குச் சென்று சம்பந்தப்பட்ட சடலங்களை அடையாளம் காணமுடியும் என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீலமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரையில் அடையாளம் உறுதிசெய்யப்படாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களின் சடலங்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதாகவும் உயிரிழந்தவர்களின், உறவினர்கள் சம்பந்தப்பட்டவர்களின் சடலங்களை அடையாளம் காணமுடியும் என்றும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீலமைப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும்.

நளின் ராஜபக்ஷ – தொலைபேசி இலக்கம் 071 0873 110

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீலமைப்பு அமைச்சு ஊடக செயலாளர்

Related posts: