அடைமழையால் பாதிக்கப்பட்ட வடமராட்சியின் நிலைமைகளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் விசேட குழுவினர் பார்வை! (படங்கள் இணைப்பு)

கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்தகாற்றுடனான அடைமழை காரணமாக வடமராட்சி பிரதேசத்தில் 442 குடும்பங்கள் இதுவரை பாதிக்கப்பட்;டுள்ளன. 55 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் படகுகள் மற்றும் வலைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை) பிரதேசத்தில் அல்வாய் வடக்குப் பகுதியில் 33 வீடுகள் சேதமடைந்துள்ளன. 64 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வடமராட்சி தென்மேற்கு (கரவெட்டி) பிரதேசத்தில் அல்வாய் பகுதியில் 09 வீடுகள் சேதமடைந்துள்ளன. 79 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வடமராட்சி கிழக்குப் (மருதங்கேணி) பிரதேசத்தில்; குடாரப்பு கிராமத்தில் 12 வீடுகள் சேதமடைந்துள்ளன. 369 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 06 படகுகள் காணாமல் போயுள்ளது. 02 வலை மடிகளை பேரலை முற்றாக இழுத்துச் சென்றுள்ளது. 98 வலைகள் பயன்படுத்த முடியாமல் சேதமடைந்துள்ளன. அல்வாய் கைவிரை பகுதியில் பனை மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் மின்கம்பிகள் அறுந்து தொங்குகின்றன. மின்கம்பங்களும் வீழ்ந்து கிடக்கின்றன. இந்நிலையில் சேதமடைந்த பகுதிகளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சி பிதேச நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தலைமையிலான பரதிநிதிகள் சென்று பார்வையிட்டனர்.
அடைமழை காரணமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு பிரதேச அரச அதிகாரிகள் மாவட்டச் செயலகத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை வங்கக்கடலில் தாற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்று வருவதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு நிலைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்றும் நாளையும் மழை தொடர்ச்சியாகப் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|