அடைமழையால் இடம்பெயர்ந்த முகாம் மக்கள் பெரும் பாதிப்பு !

Sunday, November 12th, 2017

யாழ்.  மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக நீடித்த அடை மழை மற்றும் வெள்ளத்தால் யுத்தம் காரணமாக வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வரும் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்காலிக முகாம்களிலுள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தமையால் மல்லாகம் நீதவான் நலன்புரி முகாமில் 60 குடும்பங்களும், மல்லாகம் கோணாப்புலம் நலன்புரி முகாமில் 20 குடும்பங்களும்,  சுன்னாகம் கந்தரோடை பிள்ளையார் நலன்புரி முகாமில் 37 குடும்பங்களும், சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் 30 குடும்பங்களும், சுன்னாகம் கண்ணகி முகாமில் 20  குடும்பங்களும்  பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.

அத்துடன், அடைமழை காரணமாகத் தற்காலிக முகாம்களிலுள்ள மேலும் பல குடும்பங்களும்  பாதிக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக முகாம்களிலுள்ள பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.