அடுத்த 5 மாதங்களுக்குள் தொடருந்து டிக்கெட்டுகளுக்கு QR குறியீடு அறிமுகப்படுத்த நடவடிக்கை – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு!
Monday, April 8th, 2024இந்தாண்டுக்குள் புகையிரத பயணங்களுக்கு ஈ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக குறித்த திணைக்களத்தின் பொது மேலாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன் 19 மில்லியன் டொலர் செலவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில காலமாக நடைமுறைப்படுத்தப்படாத இத்திட்டத்தின் பணிகளை துரிதப்படுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்கமைய, இந்த திட்டப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் முதல் கட்டமாக, அடுத்த 5 மாதங்களுக்குள் தொடருந்து டிக்கெட்டுகளுக்கு QR குறியீடு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஹெலிகொப்டரில் தங்கத்தையும் பணத்தையும் நிரப்பிக்கொண்டு தப்பி ஓடிய ஆப்கான் ஜனாதிபதி - ரஷ்யா பரபரப்பு த...
மாணவர் சமூகம் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை - விரைவில் மாற்றங்கள் உள்வாங்கப்படும் ...
400 கோடி ரூபா சொகுசு வாகன பதிவு மோசடி - ஊழல் ஒழிப்பு அதிரடிப் பிரிவினரால் ஒருவர் கைது!
|
|