அடுத்த 48 மணிநேரம் வரை கடுமையான சட்டம் அமுல்!

Thursday, February 8th, 2018

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல்களுக்கான பிரசாரம் புதன் நள்ளிரவு 12 மணியுடன் நிறைவக்கு வந்த நிலையில் வாக்களிப்புத் தினம் வரையிலான அடுத்த 48 மணி நேரம் வரை கடுமையாகச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த 48 மணி நேரத்தில் எந்த வகையிலும் எவ்வித பிரசாரங்களையும் முன்னெடுக்க முடியாது என்பதால் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகப் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

இன்று (நேற்று) நள்ளிரவுடன் அனைத்து விதமான பிரசாரங்களும் தடைச்செய்யப்படுகின்றன. வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்பதும் நேற்று இரவு 9 மணியுடன் நிறைவுக்கு வருகின்றது. எனவே அதன் பின்னர் உள்ள 48 மணிநேர மௌன காலத்தில் எவரேனும் பிரசாரங்கள் செய்வார்களாயின் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் இக்காலப்பகுதியில் வேட்பாளரின் வீட்டிலோ காரியாலயத்திலோ கூட கட்டவுட்களைக் காட்சிப்படுத்த முடியாது. அது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும் என்றார்.

Related posts:


தென்னிந்திய மீனவர்களோடு தொடர்புகளைப் பேணாதீர்கள் – யாழ்மாவட்ட கடற்றொழிலாளர்களிடம் கட்டளைத் தளபதி கோ...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சரவை எந்த தீர...
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் சிலர் நாட்டில் அராஜகத்தை ஏற்படு...