அடுத்த 24 மணி நேரத்தில் புதிய தாழமுக்கம் நாட்டை சூழவுள்ள கடல் பிராந்தியங்களின் வானிலையில் மாற்றம்!

Sunday, November 29th, 2020

வங்காள விரிகுடரவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் அடுத்த 36 மணித்தியாலங்களில் புதிய தாழமுக்கமாக மாற்றமடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது மேலும் தீவிரமடைந்து இலங்கையின் வடகரையின் ஊடாக மேற்கு திசையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடல் பிராந்தியங்களின் வானிலையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையுடனான வானிலை நிலவக்கூடுமெனவும் சில சந்தர்ப்பங்களில் 50 மில்லிமீற்றர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts: