அடுத்த வாரம்முதல் பூஸ்டர் தடுப்பூசிக்கான வசேட நடமாடும் நிலையங்கள் – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தகவல்!

Sunday, January 30th, 2022

அடுத்த வாரம்முதல் விசேட தடுப்பூசி வேலைதிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி பூஸ்டர் தடுப்பூசிக்கான நடமாடும் நிலையங்கள் செயற்படுத்தப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

தியத்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பூஸ்டர் தடுப்பூசியை விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு மக்களை வலியுறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியிரந்தமை குறிப்பிடத்தக்கது..

இதனிடையே

இலங்கையில் மேலும் 82 புதிய ஒமிக்ரோன் நோயாளர்கள் மற்றும் ஆறு புதிய டெல்டா வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் சமீபத்திய மாறுபாடு அறிக்கையின்படி, 88 இல் இருந்து 82 புதிய ஒமிக்ரோன் மற்றும் 6 புதிய டெல்டா வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

இந்த 88 மாதிரிகள் ஜனவரி 4 ஆவது வாரத்திலிருந்து சமூகத்திலிருந்து வரிசைப்படுத்தப்பட்டன எனவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

Related posts: