அடுத்த வாரம்முதல் தடையின்றி மின் விநியோகம் வழங்க ஏற்பாடு – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை!

அடுத்த வாரத்தின் முற்பகுதியில் இருந்து தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம், தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் நாட்டின் மின்சார தேவையினை பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை கருத்திற்கொண்டு நேற்று மின் துண்டிப்பை அமுல்படுத்தாதிருப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின் உற்பத்திக்குத் தேவையான டீசலை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் வழங்குவதை மின்உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவது பலருக்கு வாய்ப்பாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்பொழுது 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. இதனை அதிகரிக்க நேரிடும் என பரவலாக கூறப்பட்ட நிலையில் மின்வெட்டை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|