அடுத்த வாரம்முதல் சீனியின் விலையை குறைக்க நடவடிக்கை – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!
Saturday, August 28th, 2021அடுத்த வாரம்முதல் சீனியின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சீனியின் விலையை குறைக்க முடியாது என சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்திருந்தார்.
மேலும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்க அவசியமான சீனி மாத்திரமே கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போதைய நிலையில், சந்தை நடவடிக்கையின் அடிப்படையில், சீனியின் விலையை உடனடியாக குறைக்க முடியாது என நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
எனினும், அடுத்துவரும் மூன்று வாரங்களில் சீனியின் விலையை 190 ரூபா, 180 ரூபா என்ற அளவுக்கு குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
உயர் தர பரீட்சையில் மோசடி: இரு அதிபர்கள் நீக்கம்!
முகம் கழுவச் சென்ற குடும்பத்தலைவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு : தொண்டமனாறு கடற்கரை வீதியில் சம்பவம்...
அதிக வெப்பம் - பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் அவசர அறிவுறுத்தல்!.
|
|