அடுத்த வாரம்முதல் அரிசி விலை குறைப்பதற்கு நடவடிக்கை – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு!

Tuesday, July 27th, 2021

சம்பா மற்றும் கீரி சம்பா ஆகியவற்றின் விலைகள் அடுத்த வாரம்முதல் ரூ 50 தொடக்கம் 75 ரூபாய் வரை குறைக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை விவசாய அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

அதிக விலைக்கு அரிசி விற்கப்பட்டால் ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் அறவிடும் சட்ட வரைவை அடுத்த வாரம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் இதனையடுத்து அரிசி விலையை நிர்ணயம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டில் சுமார் 80 சதவீத மக்கள் உட்கொள்ளும் நாட்டு அரிசியின் விலை 100 ரூபாயை விட குறைக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: