அடுத்த வருட முற்பகுதியில் நாட்டு மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அடையாள அட்டை – அமைச்சர் நாமல் ராஜபக்ச நடவடிக்கை!

2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தேசிய அடையாள அட்டை டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் இன்றையதினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
அடுத்த ஆண்டுமுதல் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அடையாள அட்டைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அத்துடன் எதிர்காலத்தில் வீதிப்போக்குவரத்து அபராதங்கள் கூட டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் இதன்போது அமைச்சர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.
Related posts:
06 ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு நிறைவுசெய்யப்படும் !
இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகளுக்கான இரத்து செய்யப்பட்ட காலம் மீண்டும் நீடிப்பு!
கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள் - வட மாகாணத்தில் புதிய வைத்தியசாலை – இராணுவ தளபதி ...
|
|