அடுத்த வருடத்திற்குள் சமுர்த்தி திட்டத்தில் 20 இலட்சம் குடும்பங்கள் இணைப்பு!

அடுத்த வருடத்திற்குள் 20 இலட்சம் குடும்பங்களை சமுர்த்தி திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் 14 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் ஒன்பதாவது நாளான நேற்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள், சமூக வலுவூட்டல், சமூகநலன்புரி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பான நிதி ஒதுக்கீடுகளுக்கு நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் கிடைத்தது.
இது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க மேலும் குறிப்பிடுகையில், ஆசியாவில் வயோதிபர்களைக் கூடுதலாகக் கொண்ட இரண்டாவது நாடாக இலங்கை அமைந்துள்ளது. ஊனமுற்றவர்கள் 18 இலட்சம் பேர் காணப்படுகின்றனர். இவர்களுக்காக சைகை மொழிப் பாடநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செவிப்புலன் ஆற்றல் குறைந்தவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Related posts:
|
|