அடுத்த மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது நாடாளுமன்றம்!

Saturday, October 27th, 2018

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை அடுத்து நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு சபாநாயகர் அனுமதித்த போதும், ஜனாதிபதி அதற்கு தடை விதித்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை தொடர்பில் ஆராய நாளை உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கருஜெயசூரியவுக்கு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்ட சபாநாயகர் கருஜெயசூரிய தீர்மானித்திருந்த போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அதிரடியாக ஒத்திவைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் முடிவடைந்து விட்டதாகவம், மூன்றாவது கூட்டம் எதிர்வரும் 16ஆம் திகதியே நடைபெறும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திங்கட்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டுவதாக சபாநாயகர் தெரிவித்திருந்த போதும் ஜனாதிபதி தலையிட்டு அதை ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: