அடுத்த மாதம் 10ஆம் அரசியல் அமைப்பு செயற்பாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கை!

Monday, November 21st, 2016

அரசியல் அமைப்பு செயற்பாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கை அடுத்த மாதம் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

புதிய அரசியலமைப்பை தயாரிப்பது தொடர்பான செயற்பாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கையை அடுத்த மாதம் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குழுவின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒளிப்பரப்புக்கூட்டுத்தாபன நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோதே கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் அந்த நிகழ்ச்சியில் மேலும் தெரிவிக்கையில் இடைக்கால அறிக்கை தொடர்பில்  சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைக்க முடியும் என்றும் கூறினார்.

புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக சகல கட்சிகளினதும், பங்களிப்பை பெற்றுக் கொள்வதாகவும், கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன குறிப்பிட்டார்.

jayampathy wickramaratne_CI

Related posts: