அடுத்த மாதம் முதல் மாணவர்களுக்கு காப்புறுதித் திட்டம்!

Saturday, September 9th, 2017

சுரக்ஷா என்ற மாணவர் காப்புறுதித் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அமுலுக்கு வருகின்றது. சர்வதேச சிறுவர் தினத்தன்று இந்தக் காப்புறுதித் திட்டத்தை அமுலாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனைக் கல்வியமைச்சும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் கூட்டாக அறிமுகம் செய்துள்ளன. இது தொடர்பான உடன்படிக்கையில் உரிய தரப்புக்கள் நேற்றைய தினம் கைச்சாத்திட்டுள்ளன. இந்நிலையில் இதில் பங்கேற்று கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்

இது இலவசக் கல்வியின் நன்மைகள் மேலும் கூடுதலாக மாணவர்களுக்கு கிடைக்க வழிவகுப்பதாகவும் இந்தக் காப்புறுதித் திட்டத்தின் மூலம் பாடப்புத்தகங்கள், சீருடைகள் ஆகியவற்றுக்கு அப்பால் இலவச காப்புறுதித் திட்டமொன்றையும் மாணவர்கள் பெறுவதாக அமைச்சர் கூறினார்.

காப்புறுதித் திட்டத்தின் மூலம் மாணவர் ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சமயத்திலும், மருத்துவ சேவைகளுக்காகவும் 2 இலட்சம் ரூபா கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: