அடுத்த மாதம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களது பெயர் விபர வர்த்தமானி.!

நடந்துமுடிந்த உள்ளாட்சி மன்றங்களின் உறுப்பினர்களது பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அடுத்த மாதம் 3ம் திகதி வெளியாக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உள்ளாட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களது பெயர்களை பரிந்துரைக்குமாறு, அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயாதீன குழுக்களின் தலைவர்களுக்கு, மாவட்ட உதவி மற்றும் பிரதி தேர்தல் ஆணையாளர்களால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த விபரங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 2ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 25 சதவீத பெண்களுக்கான ஒதுக்கீட்டை, மட்டக்களப்பு ௲ மண்முனைப்பற்று உள்ளிட்ட 10 உள்ளாட்சி மன்றங்களில் அமுலாக்குவது சிரமம் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
புத்தாண்டை முன்னிட்டு குடாநாட்டின் பாதுகாப்பு அதிகரிப்பு!
ஜனாதிபதி தாய்லாந்து பயணம்!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!
|
|