அடுத்த மாதம் இலங்கை  – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்லில் பேச்சுவார்த்தை!

Friday, October 21st, 2016

சர்ச்சைக்கரிய இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக அடுத்த மாதம் இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சசு  தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர,கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இது தொடர்பாக கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர கருத்து தெரிவிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜின் அழைப்பின் பேரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.

08-1454921138-mahinda-amaraveera

Related posts:


அரசியல் கட்சிகள் பதிவு தொடர்பான பரிசீலனை அறிக்கை 18ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் க...
இலங்கையின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைக் கடந்தது – பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார பக...
பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் வடக்கில் பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை - வடக்கு மாகா...