அடுத்த தேர்தலையும் பிரதமர் மஹிந்தவே வழிநடத்துவார் – பிரதமரின் பிரத்தியேக செயலாளர் உறுதி!

Friday, January 29th, 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்வதற்கான சூழ்ச்சிகள் பலரிடத்திலும் இருப்பதாக பிரதமரின் பிரத்தியேக செயலாளரும் கொழும்பு மாவட்ட இணைப்பாளருமான தனசிறி அமரதுங்க பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உயிரிழந்துவிட்டதாகவும் அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் கடந்த வார இறுதியில் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வைரலாகப் பரவி வந்தன.

இந்நிலையில் ஊடகமொன்றுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உயிரிழந்ததாக வெளியாகிய தகவல் குறித்தும், இது குறித்த உண்மை நிலவரங்களையும் பிரத்தியேக செயலரான தனசிறி தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்போது – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு புலிகளாலும் முடியாமற் போனது எனவும், அடுத்த தேர்தலையும் பிரதமர் மஹிந்தவே வழிநடத்துவார் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: