“அடுத்த தசாப்தத்திற்கு ஏற்றவாறு இராணுவத்தை தயார்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, December 15th, 2023

உலக சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய இராணுவத்தினரை உருவாக்க பாதுகாப்பு துறையினரை புதிய தெரிவுகளுடன் கூடியவர்களாக வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாமரைத் தடாகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு சேவைக் கட்டளைகள் மற்றும் பதவி நிலைக் கல்லூரியின் 17 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்..

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அடுத்த தசாப்தத்திற்கு ஏற்றவாறு இராணுவத்தை தயார்படுத்த வேண்டும். வெளிநாட்டுகளின் பாதுகாப்பு துறை அதிகாரிகளை இலங்கையின் பாடநெறிகளுக்காக உள்வாங்குவதன் மூலம் பாதுகாப்பு கற்கைகளை நடைமுறைக்கு அமைவானதாக மாற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது.

ஆசிய வலயத்தின் ஆயுத படையினர் சிறப்புத் திறன்களை கொண்டுள்ளனர். அந்த திறன்களுடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பத்தையும் இணைப்பதால் நவீனமயமான பாதுகாப்பு படையொன்றை கட்டமைக்க முடியும்.

பாதுகாப்பு உபாய மார்க்க விடயங்களை கற்பதற்கு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், கெடட் பயிற்சி பாடசாலை மற்றும் பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் பதவி நிலைக் கல்லூரி ஆகிய நிறுவனங்கள் மூன்றும் பெரும்பணி ஆற்றி வருகின்றன.

தற்போதைய சர்வதேச மோதல்களை சில ஊடகங்கள் மக்கள் கருத்தாடல் வரையில் கொண்டுச் சென்றிருப்பதால் உலக மக்களின் பாதுகாப்புக்கு பாதகமான விளைவுகள் ஏற்படும்.

பாரம்பரிய பாதுகாப்பு முறைமைகளிலிருந்து விடுபட்டு நிலவுகின்ற மோதல்களினால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியம்” எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: