அடுத்த சில வாரங்க மிகவும் முக்கியமானவை – கொரோனா நிலைமை தொடர்பில் நிபுணர் சமித் கினிகே எச்சரிக்கை!

இலங்கையின் கொரோனா நிலைமையை தீர்மானிப்பதில் அடுத்த சில வாரங்களில் மிகவும் முக்கியமானவை என தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித் கினிகே தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தில் பொதுமக்கள் எவ்வாறு நடந்துகொள்கின்றார்கள் என்பது மிகவும் முக்கியமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா நிலவரம் கட்டுப்பாட்டு நிலைக்குள் உள்ள போதிலும் இலங்கை வைரசிலிருந்து பாதுகாப்பாக உள்ளது என்பது இதன் அர்த்தமில்லை என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் இன்னமும் ஆபத்திலிருந்து மீளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க மாத்திரம் முடியும் என தெரிவித்துள்ள அவர் உலக நாடுகள் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அலட்சியமாகயிருந்தால் இலங்கையில் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை காணநேரிடலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
நாங்கள் முன்கூட்டியே தயாராகவேண்டும், பூஸ்டர் டோஸினை பெறுவதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|