அடுத்த சில மாதங்களில் கொரோனா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை மாற்றம்பெறும் – சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல நம்பிக்கை!

Tuesday, October 5th, 2021

நாட்டில் அடுத்த சில மாதங்களில் கொரோனா தொற்றை ஒழிக்க முடியும் என்று தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல இதை தான் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உலகில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நான்கு முக்கிய நாடுகளில் இலங்கை முன்னணி நாடாக மாறியுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்..

அத்துடன் எல்லா நேரமும் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதைப் பிரதான பொறுப்பாகக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்டபிடத்தக்கது.

Related posts: