அடுத்த சில நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு காலநிலையில் மாற்றம்!

Saturday, December 17th, 2016

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அடுத்து சில நாட்களில் வறட்சியான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ஊவா, கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் இன்று மழை பெய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மழையுடன் பலத்த காற்று மற்றும் மின்னல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால், சேதங்களை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

drought_evaporating_pond

Related posts: