அடுத்த இரண்டு வாரங்களில் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் – அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

ஏப்ரல் 21 நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு இரண்டு வாரங்களில் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணியின் அதிகார சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த இளைஞர், யுவதிகள் பெருமளவில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.
எனினும் அவர்களுக்கு அரசாங்கத்திடம் எதுவும் கிடைப்பதில்லை என்பதில் ஓரளவு அதிருப்தியுடன் உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததால், சில எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது போயுள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நாட்டில் உள்ள அனைவரும் கொரோனா ஊசி மருந்தை வழங்கி, நாட்டில் இருந்து கொரோனா தொற்று நோயை முற்றாக ஒழிப்பது அரசாங்கத்தின் நோக்கம்.
இதன் பின்னர் பொருளாதாரத்தை வலுப்படுத்தி மக்களுக்கு வழங்கிய அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழில் வாய்ப்பில்லாத அனைத்து இளைஞர், யுவதிகளுக்கும் தொழில் வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|