அடுத்த ஆண்டுக்கான ரி-ருவென்ரி உலகக்கிண்ண தொடர் இரத்து!

Monday, June 19th, 2017

அடுத்த வருடம் நடத்தப்படவிருந்த ரி-ருவென்ரி உலகக்கிண்ண தொடரை இரத்து செய்ய சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

முன்னணி அணிகள் தங்களுடைய இரு நாடுகளுக்கிடையேயான தொடரில் அதிக அளவில் விளையாட வேண்டியிருப்பதாலேயே இந்த சிக்கல் நிலைமை தோன்றியுள்ளதாக ஐ.சி.சி. விளக்கமளித்துள்ளது.

இதன்படி அடுத்த ஆண்டு நடத்தப்படவிருந்த ரி-ருவென்ரி உலகக்கிண்ண தொடரை 2020ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொடர் நடத்தப்படும் இடம் இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ரி-ருவென்ரி உலகக்கிண்ண தொடர், இதுவரை தென்னாபிரிக்கா (2007), இங்கிலாந்து (2009), மேற்கிந்திய தீவுகள் (2010), இலங்கை (2012), பங்களாதேஷ் (2014), இந்தியா (2016) ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: